This Portal is Connected to Production Database.

Tamil Language Pack
Thumbnail Image of தன்னையறியும் விஞ்ஞானம்

தன்னையறியும் விஞ்ஞானம் (Thannaiyarium Vinnanam)

Author: அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

Description

ஆழ்ந்த அறிவுடனும் உயர்ந்த ஆன்மீக உணர்வுடனும் உண்மையான சாதுவாகத் திகழ்ந்த ஸ்ரீல பிரபுபாதர் ஆன்மீகப் பஞ்சத்தில் தவிக்கும் சமுதாயத்தின் மீது மிகுந்த அக்கறையும் கருணையும் கொண்டிருந்தார். சிறந்த ஆத்ம ஞானிகளான ஆச்சாரியர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக வழங்கி வரும் காலத்திற்கு அப்பாற்பட்ட உயர்ந்த ஞானத்தினை மனித சமுதாயத்திற்கு அறிவொளி வழங்கும் பொருட்டு, நவீன கால மக்களுக்காக அவர் வழங்குகிறார். அந்த மிகவுயர்ந்த அறிவு உடலினுள் இருக்கும் ஆத்மா, உலக இயற்கை, உள்ளும் புறமும் வீற்றிருக்கும் பரமாத்மா முதலிய இரகசியங்களை வெளிப்படுத்துகிறது. ஆர்வத்தைத் தூண்டும் இந்த நூலில், ஆத்ம ஆராய்ச்சி குறித்து புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணருடனான ஸ்ரீல பிரபுபாதரின் கருத்து பரிமாற்றம், மறுபிறவியைப் பற்றி இலண்டன் வானொலி நிறுவனத்திற்கான அவரது பேட்டி, உண்மை மற்றும் போலி குருமார்களைப் பற்றி இலண்டன் டைம்ஸ் பத்திரிகையில் அவர் தெரிவித்த ஆணித்தரமான கருத்துகள், கிருஷ்ணர் மற்றும் கிறிஸ்துவைப் பற்றி ஜெர்மானிய பெனெடிக்டின் மத குருவிடம் அவர் மேற்கொண்ட உரையாடல், கர்ம விதிகள் குறித்த அவரது ஆழ்ந்த கண்ணோட்டம், ஆன்மீகப் பொதுவுடைமையைப் பற்றி ரஷ்யப் பேரறிஞர் ஒருவருடனான அவரது கலந்துரையாடல் என பல்வேறு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தன்னையறியும் விஞ்ஞானம் என்னும் இந்நூல், நம்முள் இருக்கும் அறிவையும் உற்சாகத்தையும் தூண்டி, பரமாத்மாவின் தொண்டில் ஆத்மா இணைவதற்கு உதவும்.

Sample Audio

Copyright © 1972, 2022 BHAKTIVEDANTA BOOK TRUST (E 5032)