ஸ்ரீமத் பாகவதம் முதல் காண்டம் படைப்பு (Srimad Bhagavatam Mudhal Kaandam pataippu)
Author: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
Description
ஸ்ரீமத் பாகவதம் வேதாந்த காவியமும் இலக்கிய நூலுமாகிய ஸ்ரீமத் பாகவதம், கால பரிமாணத்திற்கு அப்பாற்பட்ட அறிவுக் களஞ்சியங்கள் என்று அறியப்படும் வேதங்களில் ஒரு போற்றத்தக்க நிலையை வகிக்கின்றது. மனித அறிவாற்றல் குறித்த அனைத்து துறைகளுடனும் தொடர்பு கொண்ட வேதங்கள் இதன் ஆதியில் வாய்மொழி மரபாக பேணி பாதுகாக்கப்பட்டு வந்தன. பின்னர், பகவானின் இலக்கிய அவதாரம் என்று அறியப்படும் ஸ்ரீல வியாசதேவர் இவற்றை எழுத்துக்களில் வடித்தார். வேதங்களைத் தொகுத்த பின்னர், அவற்றின் ஆழ்ந்த கருத்துகளின் சாரத்தை ஸ்ரீமத் பாகவதம் என்னும் வடிவில் வழங்குமாறு ஸ்ரீல வியாசதேவர் தனது ஆன்மீக குருவினால் ஊக்கப்படுத்தப்பட்டார். எனவே, ஸ்ரீமத் பாகவதம், “வேத ஞானம் என்னும் மரத்தின் கனிந்த பழம்” என்று அறியப்படுகிறது. இது வேத அறிவை முழுமையாகவும் அதிகாரப்பூர்வமாகவும் வழங்கக்கூடியதாகும். அட்டைப்பட விளக்கம்
Sample Audio