This Portal is Connected to Production Database.

Tamil Language Pack
Thumbnail Image of கிருஷ்ணர் (புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள்)

கிருஷ்ணர் (புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள்) (Kirusnar proshotthamaragiya Mulumudhar Kadavul)

Author: அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

Description

"இந்நூல், 5,000 வருடங்களுக்கு முன்பாக இப்பூமியில் தோன்றிய ஸ்ரீ கிருஷ்ணரின் அசாதாரணமான செயல்களை உண்மையான முறையில் எடுத்துரைக்கின்றது, கிருஷ்ணர் எவ்வாறு இத்தனை நூற்றாண்டுகளாக மக்களை வசீகரிக்கின்றார் என்பதை படம்பிடித்து காட்டுகிறது. கிருஷ்ணரை எப்போதும் நினைக்க வேண்டும் இதுவே தொன்றுதொட்டு வரும் பாரத ஆன்மீகப் பண்பாட்டின் இலக்காகும். ஓவியம், சிற்பம், இசை, நாட்டியம், தத்துவம் என பலவற்றின் மூலமாக, இன்றும்கூட பகவான் கிருஷ்ணரின் பெருமைகள் பறைசாற்றப்படுகின்றன. நித்தியமான ஆன்மீக லீலைகளை நமக்குக் காண்பித்து, முழுமுதற் கடவுளின் பூரண தன்மை என்ன என்பதை முழுமையாக வெளிப்படுத்தி, அவருடன் இணைவதற்கான ஆவலை நம்மிடம் தூண்டுவதற்காக, கிருஷ்ணர் ஐம்பது நூற்றாண்டுகளுக்கு முன்பாக இங்கு அவதரித்தார். ஸ்ரீ கிருஷ்ணரின் அற்புத லீலைகள் அனைவரையும் கவருகின்றன, குழந்தைகள்கூட கிருஷ்ண கதைகளை விரும்புகின்றனர். அவரது வாழ்க்கை, ஆழ்ந்த தத்துவ அறிவையும் ஆன்மீகப் பார்வையையும் வழங்குகிறது, இறைவன் என்னும் நபருடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் மனதில் நிறுத்துகிறது. நேரத்தை ஒதுக்கி இந்நூலைப் படிப்பவர்கள் மனித சமுதாயத்திற்கு இவ்வளவு பொருத்தமாக உள்ளதே என்று எண்ணி வியப்படைவர்."

Sample Audio

Copyright © 1972, 2022 BHAKTIVEDANTA BOOK TRUST (E 5032)