தர்மம் (Dharmam)
Author: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
Description
தர்மம் தெய்வீக நிலையை அடைவதற்கான வழி “நான் யார்? என்னுடைய வாழ்வின் உண்மையான தேவைகள் என்ன? அத்தேவைகளை எவ்வாறு அடைவது?”—சிந்திக்கும் திறன் கொண்ட மனிதர்களால் அடிக்கடி கேட்கப்படும் இதுபோன்ற முக்கிய கேள்விகளுக்கு தர்மம் என்னும் இப்புத்தகம் பதிலளிக்கின்றது. “ஒரு பறவையைக் கூண்டில் வைத்து வளர்ப்பதாக எடுத்துக் கொள்வோம். அப்பறவைக்கு உணவளிக்காமல், கூண்டினை மட்டும் மெருகேற்றி வைத்தால், அப்பறவை ஒருபோதும் மகிழ்ச்சியடைய முடியாது. அதுபோலவே, இந்த ஜடவுடலானது ஆத்மாவின் கூண்டைப் போன்றது; நாம் உடலை மட்டும் பராமரித்து வந்தால், ஆத்மாவினால் ஒருபோதும் மகிழ்ச்சியடைய முடியாது. ஆத்மாவானது உடலினாலும் மனதினாலும் மூடப்பட்டுள்ளது; உடல் சம்பந்தப்பட்ட சௌகரியங்கள் மட்டுமின்றி மனத் திருப்தியும்கூட ஆத்மாவிற்கு ஒருபோதும் மகிழ்ச்சியைத் தர இயலாது,” என்று ஸ்ரீல பிரபுபாதர் உரைக்கின்றார். ஆத்மாவின் உண்மையான மகிழ்ச்சி என்ன என்பதையும், அதை எவ்வாறு அடைவது என்பதையும் அறிந்துகொள்ள தர்மம் என்னும் இப்புத்தகத்தை படியுங்கள்.
Sample Audio