ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் ஆதி லீலை, பாகம் இரண்டு (Sri Chaitanya Charitamrita Adi Leela Baagam Irandu)
Author: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
Description
ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் வாழ்வையும் உபதேசங்களையும் எடுத்துரைக்கும் அதிகாரம் பொருந்திய தனிச்சிறப்பு வாய்ந்த நூல். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, ஒரு மாபெரும் தத்துவ அறிஞர், பண்டிதர், சந்நியாசி, உயர்ந்த பக்தர் முதலிய போர்வையில், பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சாக்ஷாத் பகவான் கிருஷ்ணரின் தெய்வீக அவதாரமாவார். தத்துவ மற்றும் ஆன்மீக உண்மைகளின் மிகவுயர்ந்த களஞ்சியமாகத் திகழும் அவரது உபதேசங்கள் அன்றிலிருந்து இன்று வரை எண்ணற்ற அறிஞர்களின் மத்தியில் செல்வாக்குடன் திகழ்ந்து வருகிறது. ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் மூல வங்காள ஸ்லோகத்துடன் கூடிய இந்த விளக்கவுரை தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரால் அருளப்பட்டதாகும். இவர் உலகின் தன்னிகரற்ற பண்டிதராகவும், பாரதப் பண்பாட்டையும் தத்துவத்தையும் உலகிற்கு எடுத்துரைத்தவர்களில் தலைசிறந்தவராகவும், உலகிலேயே அதிகமாக விற்பனையாகும் பகவத் கீதை உண்மையுருவில் நூலின் ஆசிரியராகவும் திகழ்பவர். ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் இந்த மொழிபெயர்ப்பு, தத்துவம், பண்பாடு, ஆன்மீகம் முதலியவற்றை தற்போதைய மனித சமுதாயத்திற்கு எடுத்துரைக்கும் ஈடுஇணையற்ற நூலாகும்.
Sample Audio